சேத்துப்பட்டு அருகே பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சேத்துப்பட்டு அருகே பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 6:36 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு அருகே பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு அருகேயுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவருடைய மனைவி ரம்யா (37). செந்தில்குமார் தெள்ளாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13–ந் தேதி காலை செந்தில்குமார் வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் ரம்யா வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் வசிக்கும் அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மாலை நேரத்தில் ரம்யா வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

நகை, பணம் திருட்டு

அங்கு அறைகளில் பொருட்கள், துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ பூட்டை உடைத்து அதில் இருந்த 11¾ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2¼ லட்சம் ஆகும்.

இதுகுறித்து செந்தில்குமார் சேத்துப்பட்டு போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story