108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தர்மபுரியில் 21–ந் தேதி நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஒருங்கிணைப்பாளர் டைட்டஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஒருங்கிணைப்பாளர் டைட்டஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவையாகும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரக கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 21–ந் தேதி காலை 9.30 மணி முதல் 3 மணி வரை தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. மருத்துவ உதவியாளர் பணிடத்திற்கு 19 வயதுக்கு மேல் 30 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளலாம். மாத ஊதியம் ரூ. 11 ஆயிரத்து 600 வழங்கப்படும். ஓட்டுனர் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரும், 23 வயதுக்கு மேற்பட்ட 35 வயதுக்கு மிகாமல் உள்ளவராகவும், உயரம் 162.5 செ.மீ.க்கு குறையாமல் இருப்பவராகவும், இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றவராகவும், ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 11 ஆயிரம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.