குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஜீவா நகரில் கடும் வறட்சியினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பொம்மிடி,
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஜீவா நகரில் கடும் வறட்சியினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் சீராக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 30–க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் ஆகியோர் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
Next Story