தெப்பக்காட்டில் பூத்துக்குலுங்கும் வெளிநாட்டு மலர்கள்


தெப்பக்காட்டில் பூத்துக்குலுங்கும் வெளிநாட்டு மலர்கள்
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை தெப்பக்காட்டில் கொடை சீசனை முன்னிட்டு வெளிநாட்டு மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

மசினகுடி

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இதில் சில மரங்கள் கோடை காலத்திலும், சில மரங்கள் கோடை காலத்திலும் பூத்து குலுங்குவது வாடிக்கையானது. குறிப்பாக கோடை காலத்தில் பூக்க மூடிய இலைபொரசு, ஜகரண்டா, டிலோனிக்ஸ் ரிஜ்யா போன்ற மரங்கள் அதிகமாக உள்ளன. இதில் சாலை ஓரத்தை அழகுபடுத்தும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட டிலோனிக்ஸ் ரிஜ்யா மரங்களில் தற்போது மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது காண்போரை கவர்ந்திழுக்கிறது.

இதுகுறித்து நேற்று சுற்றுலா பயணிகள் சிலர் கூறியதாவது:–

சிவப்பு கம்பளம்

கோடை சீசனை முன்னிட்டு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூத்துள்ள டிலோனிக்ஸ் ரிஜ்யா மலர்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக உள்ளன. தெப்பகாடு வரவேற்பு மையம், வாகன நிறுத்தும் இடம் என தெப்பகாடு பகுதி முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்களில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து போய் காணப்பட்டாலும், மரங்கள் முழுவதையும் ஆக்கிரமித்தது போன்று மலர்கள் பூத்து குலுங்குவதால் சிவப்பு கம்பளத்தை கொண்டு முடியுள்ளது போல காட்சியளிக்கிறது. இதனை பார்க்கும்போது மனதுக்கும் சந்தோ‌ஷமாக உள்ளது. ஆகவே இதனை கண்டு ரசிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து தாவரவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், லோனிக்ஸ் ரிஜ்யா மரங்களை முதுமலைக்கு வருகின்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் புகை படங்களையும் எடுத்து செல்கின்றனர். கோடை காலம், வசந்த காலம் என ஆண்டிற்கு இரண்டு முறை இந்த மலர்கள் பூக்கும் தன்மை கொண்டது. மடகாஸ்கர் நாட்டை தாயகமாக கொண்ட இந்த டிலோனிக்ஸ் ரிஜ்யா மரங்கள் சமவெளி பகுதிகளிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்திலும் வளரும் தன்மை கொண்டது என்று கூறினார்.


Next Story