லோடு ஆட்டோவில் சென்று மதுவிற்ற 2 பேர் கைது 408 மதுபாட்டில்கள் பறிமுதல்
பனவடலிசத்திரம் அருகே லோடு ஆட்டோவில் சென்று ஊர் ஊராக மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனவடலிசத்திரம்,
அவர்களிடம் இருந்து 408 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் சோதனைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தங்கள் ஊர்களில் இருந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று மது வாங்கிச் செல்கிறார்கள்.
இந்த நிலையில் பனவடலிசத்திரம் பகுதியில் சிலர் லோடு ஆட்டோவில் வைத்து மது விற்பனை செய்வதாக அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 408 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் லோடு ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைதுவிசாரணையில், அவர்கள் பனவடலிசத்திரத்தை அடுத்த அய்யாபுரம் அருகே உள்ள கே.கரிசல்குளத்தை சேர்ந்த கொடுங்காலன் (வயது 60), மாடசாமி (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் வெளியூர்களில் இருந்து மது வாங்கிக் கொண்டு லோடு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொடுங்காலன், மாடசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், லோடு ஆட்டோவையும், 408 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.