பட்டாசு வெடித்ததில் கிறிஸ்தவ ஆலயத்தில் கூரை தீப்பிடித்து எரிந்தது
பாவூர்சத்திரம்– தென்காசி மெயின் ரோட்டில் பஸ் நிலையம் அருகில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
ஆலங்குளம்,
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தென்னை ஓலைகளால் கூரை போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஆலயத்தில் திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவுக்கு வந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி கூரையின் மீது விழுந்துள்ளது. இதை கவனிக்காத திருமண கோஷ்டியினர் திருமணம் முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர். தற்போது பாவூர்சத்திரம் பகுதியில் காற்று வீசி வருவதால், கூரையின் மீது விழுந்த தீப்பொறி மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சுரண்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் கூரையின் உட்புறம் நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story