திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே மதுக்கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் உள்ள 10–க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் இந்த கடையில் தினமும் குவிந்து விடுகின்றனர்.

இதனால் அந்த பகுதி பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுவதால் மதுக்கடையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆனால் அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் விடையூர் கேசவன் தலைமையில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உள்பட அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.


Next Story