மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு
மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இந்த கூட்டத்தில் கரூர் அருகே உள்ள அருகம்பாளையம், காந்திநகர், தங்கநகர், நேதாஜி நகர், கொங்கு நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் ஒன்றாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வாங்கப்பாளையத்தில் இருந்து அருகம்பாளையம் செல்லும் வழியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் புதிதாக மதுபானக்கடை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோன்று ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றோம். மேலும் இந்த பகுதியில் 4 பள்ளி கூடங்கள் உள்ளன. எனவே அருகம்பாளையம் பகுதியில் மதுபானக்கடை வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நஷ்ட ஈடு
இதேபோன்று பஞ்சப்பட்டி, வெள்ளியணை தென்பாகம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் பகுதியில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
நொச்சிப்பட்டி, சின்னக்குளத்துப்பட்டி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மதுபானக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
மேலும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பெரியார் நகர், தில்லை நகர், கணபதி நகர், பால்வார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கரூர்- திண்டுக்கல் சாலை வெங்கக்கல்பட்டி அருகே உள்ள நத்தமேடு பிரிவில் மதுபானக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
மூக்கணாங்குறிச்சி அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் இதுவரை மதுபானக்கடை இல்லாமல் இருந்தது. மதுபானக்கடை இல்லாமல் இருந்தபோதே எங்கள் ஊரில் ஜாதி சண்டை வரும். தற்போது மதுபானக்கடை வைக்கப்பட்டு இருப்பதால் ஜாதி சண்டை அதிகம் வர வாய்ப்பு உள்ளது.
மேலும் மதுபானக்கடை இருக்கும் இடத்தை சுற்றி பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகம்கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும். சுற்றுச்சூழல் மாசு படுவதால் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் நஷ்டஈடு தரவேண்டும். இல்லை என்றால் இங்குள்ள மதுபானக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குடிநீர்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஒரு மனு கொடுத்தனர். அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் நிலையங்களில் அம்பேத்கர் உருவப்படம் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
புஞ்சைகாளிக்குறிச்சி அருகே உள்ள வெங்கக்கல்பட்டி ஊர் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து பல மாதங்கள் ஆகிறது. எனவே குடிநீருக்கு அதிகம் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உத்தரவு
கடவூர் அருகே உள்ள ராசாப்பட்டி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த குடிபாட்டுக்காரர்கள், தங்கள் குல தெய்வ கோவில் அருகில் முள்ளிப்பாடி ஊராட்சி மூலம் குப்பை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குல தெய்வ கோவிலில் சாமி கும்பிடும் போது இடையூறு ஏற்படுகிறது. எனவே குப்பை தொட்டியையும், கொட்டகையும் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோன்று நேற்று ஏராளமானவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story