உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அம்மாபட்டினம் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, ஆவுடையாப்பட்டினம், ஆயிபட்டினம் ஆகிய குக்கிராமங்களை கொண்டதாகும். இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைகள், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகி 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையிலும் மற்றும் திருச்சி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலைமறியல்

இது குறித்து தடுப்பு நட வடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டித்து அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வட்டாட்சியர் சுரேஷ்க்கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது உடனடியாக துப்புரவு பணியாளர்களை கொண்டு அம்மாபட்டினம் ஊராட்சியில் உள்ள குப்பைகள், கழிவுநீர் அகற்றப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படும். மேலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story