விராலிமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விராலிமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசை கண்டித்தும் விராலிமலை வட்டார அனைத்து விவசாயிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊர்வலமும் நடந்தது.

விராலிமலை,

தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோனதால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந் நிலையில் விராலிமலை சுங்கச்சாவடியில் நேற்று காலை விவசாயி அழகர்சாமி தலைமையில் விராலிமலை வட்டார அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊர்வலம்

பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கடைவீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு விவசாயிகளின் வாழ்வுரிமையான வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு, விவசாய உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்தி தருதல், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியர் சதீஷிடம் கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஏராளமான விவசாயிகள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி, முன்னாள் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் நல்லுச்சாமி, கத்தலூர் ராமசாமி, பூதகுடி முன்னாள் துணை தலைவர் வேலு, ராஜேந்திரன், தென்னம்பாடி கணேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story