மகாமாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்


மகாமாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்
x
தினத்தந்தி 18 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

மகாமாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் 9-வது வார்டு வாசுகி தெருவில் அமைந்துள்ள மகாமாரியம்மன், மகாகாளியம்மன், வேம்புடையான் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி குடிஅழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15-ந்தேதி இரவு அம்மனுக்கு சிறப்புவழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் முயல்வேட்டையும், மதியம் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்புஅலங்காரம், சிறப்புபூஜைகள் நடந்தன. நேற்று காலை அம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக முக்கியவீதிகளின் வழியாக வந்தனர். மதியம் பொங்கல் மற்றும் மாவிளக்குபூஜையும், இரவு அம்மன் மற்றும் வேம்புடையான் திருவீதி உலாவும் நடந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. 

Next Story