வேப்பந்தட்டையில் விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் 41 பேர் கைது
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி வேப்பந்தட்டையில் விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தின்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இழப்பீட்டுக்கான காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
41 பேர் கைது
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 5 ஏக்கருக்கு மேற்பட்ட பெருவிவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த பஸ்களை மறித்து கோஷமிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கவேல், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரும்பாவூர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்து பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Next Story