ரவுடி கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
திசையன்விளை அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் 8 ஆண்டாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கீழ புத்தேரியைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புத்தேரி நாகராஜன். பிரபல ரவுடியான இவர் கடந்த 2000–ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கஸ்தூரிரெங்கபுரம் என்ற இடத்தில் புதைக்கப்பட்டு இருந்தது. முதலில் திசையன்விளை போலீசார் சந்தேக மரணமாக கருதி வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததும் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நாங்குனேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களில் ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு திருப்பதிசாரத்தைச் சேர்ந்த கலை (வயது 36) என்பவரும் ஒருவர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனவே போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
போலீசாரிடம் ஒப்படைப்பு
இந்தநிலையில் தனிப்படை போலீசாருக்கு, கலை நாகர்கோவில் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திசையன்விளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திசையன்விளை போலீசார் கலையை கைது செய்து, நாங்குனேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குமரி மாவட்டப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.

Next Story