தூத்துக்குடி மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர் இல்லாமல் ஆடுகளை பரிசோதனை செய்யும் அவலம்


தூத்துக்குடி மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர் இல்லாமல் ஆடுகளை பரிசோதனை செய்யும் அவலம்
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர் இல்லாமல் ஆடுகளை பரிசோதனை செய்யும் அவல நிலை உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது, மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தில் மட்டுமே வெட்டி பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தால், முத்திரை இடப்படாத இறைச்சிகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. திறந்த வெளிகளில் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 15, 16–ந் தேதிகளில் இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கால்நடை டாக்டர் இல்லை

அதே நேரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர் மூலம் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து சான்றிதழ் அளித்த பிறகே விற்பனைக்கான முத்திரை இடப்பட வேண்டும். ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அங்கு சென்று முத்திரையிடுவதால் எந்த பலனும் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் 69 கால்நடை டாக்டர் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் மாநகராட்சி ஆடு அடிக்கும் கூடத்துக்கு கால்நடை டாக்டரை பணியமர்த்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர்களை பணியமர்த்த அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.

தூத்துக்குடி மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார் கூறும்போது, ஆடு அடிக்கும் கூடத்தில் கால்நடை டாக்டர் பரிசோதித்த பிறகே ஆட்டை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இதுவரை கால்நடை டாக்டர் நியமிக்கப்படவில்லை. விரைவில் கால்நடை டாக்டர் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story