ஆலங்காயம் ஒன்றியத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதிபதிகள் ஆய்வு
ஆலங்காயம் ஒன்றியத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
வாணியம்பாடி,
ஆலங்காயம் ஒன்றியத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. ஆணையாளர் ரமேஷ்குமார், வேர்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நாசீர்கான், தலைவர் வடிவேல் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை வாணியம்பாடி சார்பு நீதிமன்ற நீதிபதி ரோசின்துரை, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெனிபர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது சட்ட உதவி மையத்தின் நிர்வாக உதவியாளர் கோடீஸ்வரன், வக்கீல்கள் அம்மு, ரஞ்சித், குமார், திருப்பதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story