சமையல் உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 2,134 பேர் பங்கேற்பு


சமையல் உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 2,134 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 6:27 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. சமையல் உதவியாளர் பணிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழரசி தலைமையில் மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் சாந்தா மற்றும் மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 100–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 2,134 பேர் கலந்து கொண்டனர்.


Next Story