நெல்லை மாவட்டத்தில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 184 பெண்கள் உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,

பாளையங்கோட்டை
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி பாளையங்கோட்டை மகிழ்ச்சிநகரில் உள்ள மதுக்கடையை நேற்று மதியம் பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் டி.வி.சுரேஷ், பொருளாளர் பாபு, மண்டல தலைவர் நத்தம் முருகன், ஒன்றிய தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இதில் 10 பெண்கள் உள்பட 79 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன்
இதேபோல் நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெருவில் உள்ள மதுக்கடையை பா.ஜனதா கட்சியியினர் நேற்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பா.ஜனதா தொழில்பிரிவு மாநில செயலாளர் மகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, துணைத்தலைவர்கள் பொன் அழகுராஜ், குருசாமி, நெல்லை மண்டல தலைவர் வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையை முற்றுகையிட்டு, நிரந்தரமாக மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 58 பேரை கைது செய்தனர்.
ராதாபுரம்
ராதாபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தலைமையில் அக்கட்சியினர் ராதாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாரதீய ஜனதா கட்சியினர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய தலைவர் ராஜன், திசையன்விளை நகர தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கேசவன், ஆனந்த், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் சாந்தி ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 94 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சங்கரன்கோவில்– வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில்– திருவேங்கடம் சாலையில் உள்ள டாஸ்மாக்கடையை மூடக்கோரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சுசிலா குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பார்வையாளர் வெங்கடேசபெருமாள், ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கடையை பூட்டு போடுவதற்கு சென்ற பாரதீய ஜனதா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதீய ஜனதா கட்சியினரை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வாசுதேவநல்லூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் நகர தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டித்துரை உள்ளிட்ட 20 பேர் அர்த்தநாரீசுவரர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற போது, வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.
களக்காடு– செங்கோட்டை
களக்காடு– நாங்குநேரி சாலையில் அரசு மாணவர் விடுதி அருகில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் அந்த மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சேர்மன்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட 29 பேர் கலந்து கொண்டனர். அவர்களை களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை–வல்லம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு, நகர தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் வாசன், நகர பொதுச் செயலாளர் வேம்புராஜ், நகர செயலாளர் முத்து, செங்கோட்டை ஒன்றிய தலைவர் சரவணன், நகர இந்து முன்னணி செயலாளர் மாசாணம் உள்ளிட்ட 25 பேரை செங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
கடையம்
ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இந்து முன்னணி கடையம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஆழ்வார்குறிச்சி நகர தலைவர் மகராஜன் உள்பட 28 பேரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 16 இடங்களில் மதுக்கடை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த 184 பெண்கள் உள்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story