மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜ.க. போராட்டம் எடப்பாடியில் நடந்தது


மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜ.க. போராட்டம் எடப்பாடியில் நடந்தது
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 6:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி எடப்பாடி நகர பா.ஜ.க. சார்பில் பஸ் நிலையம் எதிரில் போராட்டம் நடைபெற்றது.

எடப்பாடி,

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி எடப்பாடி நகர பா.ஜ.க. சார்பில் பஸ் நிலையம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட பிரசாரஅணி தலைவர் அறிவொளிதங்கராஜ் தலைமை தாங்கினார். நகரதலைவர் சேட்டு அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவி யோகலட்சுமி, நிர்வாகிகள் அருள்பிரசாத், ஜெயமுருகன், ராஜ்குமார், பாலமுருகன், தனஞ்செயபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


Next Story