ராசிபுரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


ராசிபுரம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 7:19 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலாவில், ஆத்தூர் ரோட்டில் இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலாவில், ஆத்தூர் ரோட்டில் இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது. தற்போது அந்த மதுக்கடை மெட்டாலா அருகே உள்ள கப்பலூத்து என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்டலா பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. மற்றும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் வரதராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜா (தி.மு.க.) வரவேற்றார். தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் நந்தகுமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் அய்யாதுரை, சக்திவேல், கனகராஜ், பா.ம.க.வைச் சேர்ந்த மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பொன்.ரமேஷ், பா.ம.க. மாநில துணைத் தலைவர் வடிவேலன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி, மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் ராசிபுரம் பாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள. இதில் தி.மு.க., பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story