டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி திருச்செந்தூரில் 28–ந்தேதி சாலைமறியல் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி திருச்செந்தூரில் 28–ந்தேதி சாலைமறியல் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2017 1:30 AM IST (Updated: 18 April 2017 7:29 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, திருச்செந்தூரில் வருகிற 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.

திருச்செந்தூர்,

டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, திருச்செந்தூரில் வருகிற 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

டாஸ்மாக் கடைகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் பக்தர்களுக்கு இடையூறாக, பயணியர் விடுதி சாலையில் 2 டாஸ்மாக் கடைகளும், வடக்கு ரத வீதியில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளன. இதேபோன்று நாசரேத் மெயின் பஜாரில் 2 டாஸ்மாக் கடைகளும், பரமன்குறிச்சி பஜார், மெஞ்ஞானபுரம் பஜார் ஆகியவற்றில் தலா ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளன.

உடன்குடியில் பஸ் நிலையம், வாரச்சந்தை, நாசரேத் சாலை ஆகியவற்றில் தலா ஒரு டாஸ்மாக் கடையும், உடன்குடி– குலசேகரன்பட்டினம் சாலையில் 2 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.

28–ந்தேதி, சாலைமறியல்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 12 டாஸ்மாக் கடைகளையும் உடனே அகற்ற வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் வருகிற 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story