கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் சாவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை


கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் சாவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 9:05 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் செல்வராணி(வயது 20). இவரும் அதேஊரை சேர்ந்த சீனிவாசன்(25) என்பவரும் காதலித்து கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சீனிவாசன் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவி இருவரும் சாப்பிட்டனர். காற்றோட்டத்துக்காக சீனிவாசன் வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கினார். செல்வராணி வீட்டுக்குள் படுத்திருந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று அதிகாலை சீனிவாசன் வீட்டுக்குள் சென்றபோது, செல்வராணி மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சேகர் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராணியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வராணிக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் போலீசார் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story