விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் 2-வது நாளாக தொடர் முழக்க போராட்டம்


விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் 2-வது நாளாக தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் 2-வது நாளாக நடந்த தொடர் முழக்க போராட்டம்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நேற்று முன்தினம தொடங்கியது. நேற்று 2-வது நாளாக நடந்த தொடர் முழக்க போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் ஒழுங்காற்றுக் குழு அமைத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்சினைகளை போர்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாமம் போட்டு போராட்டம்

இந்த போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தளி ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய சங்க மாநில துணைத் தலைவர் லகுமய்யா, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நரசிம்மன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வயிறு மற்றும் நெற்றியில் நாமமிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story