மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சின்னமநாயக்கன்பட்டி அருகே மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர், பொதுமக்கள் மாடுகளின் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இயங்கி வந்த மதுபானக்கடைகள் உச்சநீதிமன்ற ஆணைப்படி அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி தாந்தோன்றி பகுதியில் இயங்கி வந்த மதுபானக்கடை தற்போது சின்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பா.ஜ.க.வினருடன் சேர்ந்து நேற்று கரூர்-வெள்ளியணை சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு அருகே மதுபானக்கடைக்கு செல்லும் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு தொல்லைகள்
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. கரூர் நகர தலைவர் அம்மன் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் நகுலன், வடிவேல், நகர பொதுச்செயலாளர் கவுதமன், துணை தலைவர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுபானக்கடையை அரசு உடனடியாக மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், தங்கள் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த கடையின் வழியாக காலை, மாலை வேளைகளில் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் குடிமகன்களால் அவர்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பற்ற சூழ்நிலை
மேலும் கடையில் இருந்து மதுவை வாங்கி சென்று கும்பல் கும்பலாக விவசாய நிலங்களில் உள்ள மர நிழலில் அமர்ந்து மதுவை அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளின் கால்களில் கண்ணாடி துகள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இதேபோல் விவசாய வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு இக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். முன்னதாக மாடுகளின் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story