குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
குடிநீர் வழங்கக்கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பில்லூர் ஊராட்சியில் உள்ள கம்பளிநாயக்கன்பட்டி காலனி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, ஆழ்குழாய் கிணற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் பழுதானதால் அதனை சரிசெய்ய ஊராட்சி செயலாளர் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் மின் மோட்டாரை பழுது நீக்கி ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகை
இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கம்பளிநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் (கிராம வளர்ச்சி), பில்லூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story