9 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜனதா முற்றுகை; 184 பேர் கைது
மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டம்
விருதுநகர்,
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும் பா.ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 9 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.
184 பேர்
விருதுநகரில் மாவட்ட பொதுச்செயலாளர் கஜேந்திரன் தலைமையில் அல்லம்பட்டி டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசியில் 2 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 55 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பெண் உள்பட 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையத்தில் 2 இடங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். கூமாபட்டியில் 28 பேரும், வன்னியம்பட்டியில் 7 பேரும் முற்றுகை போராட்டம் நடத்தியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் ரெயில்வே பீடர் ரோடு அருகிலுள்ள டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய ராஜ்குமார், வெற்றிவேல், ஜெயராஜ், அழகர்சாமி உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தார்கள். மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 பெண்கள் உள்பட 184 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Next Story