எண்ணூரில் வீட்டில் பதுக்கிய ரூ.3 லட்சம் செம்மர கட்டைகள் பறிமுதல் கணவன்–மனைவி உள்பட 4 பேர் கைது


எண்ணூரில் வீட்டில் பதுக்கிய ரூ.3 லட்சம் செம்மர கட்டைகள் பறிமுதல் கணவன்–மனைவி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 19 April 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சிலர் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்து விற்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருவொற்றியூர்,

 இதையடுத்து எண்ணூர் போலீஸ் உதவி கமி‌ஷனர் தினகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது 118–வது பிளாக்கில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் காஜா மொய்தீன் (வயது 47) என்பவரது வீட்டில் அட்டைப்பெட்டிகளில் 350 கிலோ செம்மர கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காஜாமொய்தீன், அவரது மனைவி அமுலு (40), செம்மர கட்டைகளை வாங்க வந்த ராயபுரத்தை சேர்ந்த சையது இப்ராகீம் (47), ஜாபர் (40) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் செம்மர கட்டைகளை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அந்த செம்மர கட்டைகளை கும்மிடிப்பூண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story