ஈமுக்கோழி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நிலம் – வாகனங்கள் ஏலம்
ஈமுக்கோழி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நிலம் –வாகனங்கள் ரூ.1 கோடிக்கு ஏலம்
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக 8 ஈமுக்கோழி நிறுவனங்களி நிலங்கள், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், தளவாடம் மற்றும் அலுவலகப் பொருட்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமையில் நேற்று ஏலம் விடப்பட்டது. இதில் நிலத்துக்கு ரூ.25 ஆயிரமும், வாகனத்திற்கு ரூ.10 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.25 ஆயிரமும், தளவாடம் மற்றும் அலுவலக பொருட்களுக்கு ரூ.10 ஆயிரமும் பிணை வைப்புத்தொகையாக செலுத்தியவர்கள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். 4 சக்கர வாகனங்கள் 13 ஏலம் விடப்பட்டது. இதில் 9 வாகனங்கள் ரூ.23 லட்சத்து 47 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
2 இருசக்கர வாகனங்கள் ரூ.30 ஆயிரத்துக்கும், தளவாடம் மற்றும் அலுவலக பொருட்கள் ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. மேலும் 6 நிலங்கள் ஏலம் விடப்பட்டத்தில் 2 இடங்கள் மட்டும் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களையும் ரூ.86 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்துக்கு ஏலம் போனது.