போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம் 4 பேர் பணிகளை தொடங்கினர்


போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம் 4 பேர் பணிகளை தொடங்கினர்
x
தினத்தந்தி 19 April 2017 5:15 AM IST (Updated: 19 April 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முதன் முறையாக 4 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகருக்கு சவாலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய போலீஸ் கமிஷனர் கரன்சின்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதல் கட்டமாக சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி வடசென்னை பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள்

சென்னை மாநகர போக்குவரத்து போலீசில் 1,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் தெரிவித்தார்.
இதனிடையே மாலதி, இந்துமதி, லில்லி, பிரான்சிஸ் மேரி ஆகிய 4 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முதன் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் பிரான்சிஸ் மேரியும், ஐ.சி.எப். பகுதியில் மாலதியும், தியாகராயநகர் பகுதியில் இந்துமதியும், பாண்டிபஜார் பகுதியில் லில்லியும் தங்கள் பணியை தொடங்கினர்.

பரிந்துரை

இவர்களுடைய பணி சிறப்பாக இருப்பதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்க போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் பவானீஸ்வரி கூறினார்.

Next Story