கடைக்குள் கார் புகுந்தது கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம்


கடைக்குள் கார் புகுந்தது கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 April 2017 3:45 AM IST (Updated: 19 April 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே கடைக்குள் கார் புகுந்தது. இதில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது45). இவர் சோழபுரம் மெயின் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி வந்த தோப்புதுரையை சேர்ந்த அல்லாபிச்சை (37), அதில் பயணம் செய்த முத்துப்பேட்டையை சேர்ந்த பாபுராஜகோபால், துரைராஜ், அவருடைய மனைவி செல்வி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 4 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சேதம் அடைந்த கடை

விசாரணையில் சென்னையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார், கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. கார் புகுந்ததால் கடை பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story