கும்பகோணம் அருகே நாய்கள் கடித்ததில் மான் சாவு

கும்பகோணம்,
கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூரில் ஒரு மான் சுற்றி திரிந்தது. அதை நாய்கள் கூட்டமாக சென்று கடித்து குதறின. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர். பின்னர் கும்பகோணம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அய்யாநல்லூருக்கு சென்று சிகிச்சைக்காக மானை கும்பகோணம் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மானுக்கு வனத்துறை அலுவலகத்தில் கால்நடை மருத்துவர் அர்ஜூன் சிகிச்சை அளித்தார். ஆனால் மான் சிகிச்சை பலன் இன்றி இறந்தது. கும்பகோணம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மான்கள் அதிகளவில் வசித்து வருவதாகவும், தண்ணீரை தேடி ஊருக்குள் வரும்போது மான்கள் நாய்களிடம் சிக்கி விடுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story