தஞ்சையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
தஞ்சையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மைக்கை போலீஸ் அதிகாரி பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த தெற்கு மானோஜிப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவகல்லூரி சாலையில் இருந்த கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து தெற்கு மானோஜிப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதையடுத்து இந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் நேற்று மானோஜிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றனர்.
மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மைக் மூலம் பேசினர். அப்போது அங்கு வந்த மருத்துவகல்லூரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மைக்கை பிடுங்கிச்சென்றால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தஞ்சை தாசில்தார் குருமூர்த்தி, தஞ்சை நகர போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அடுத்த மாதம் (மே) 5-ந்தேதிக்குள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய முற்றுகை போராட்டம் மதியம் 2.15 மணி வரை நீடித்தது.

Next Story