கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி குன்னத்தில் தமிழ் மாநில விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையத்தில் நேற்று தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் , தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தனராசு தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், ஆண்டு முழுவதும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்.
வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கைது
இந்த சாலை மறியல் போராட்டத்தில் 42 பெண்கள் உள்பட 90 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

Next Story