ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. இதை கண்டித்தும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் நெடுவாசலில் மீண்டும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
7-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள் வாயில் கருப்பு துணியை கட்டி, நெடுவாசல் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து போராடுவோம்
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போது:-
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நாளில் இருந்து, இத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. அனல் காற்று வீசுவதால் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையும் மீறி எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தையும், எதிர்கால சந்ததியினரையும் காப்பதற்காக நாங்கள், எங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story