குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைசேரி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். விவசாயியான இவர் நேற்று காலை திடீரென்று செந்துறையில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறினார். இதைப்பார்த்து அங்கு கூடிய பொதுமக்கள், அவரிடம் கீழே இறங்குமாறு கூறினர்.
ஆனால் அவர், தான் வைத்திருந்த கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஒவ்வொன்றாக கூடி இருந்த பொதுமக்களை நோக்கி வீசி கோஷமிட்டார். அதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் உடனடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைய முக்கிய காரணமாக உள்ள சிமெண்டு ஆலைகளை மூட வேண்டும். இலங்கைசேரி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டு இருந்தார்.
தற்கொலை மிரட்டல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் செல்போன் கோபுரத்தில் ஏறி, வீரபாண்டியனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டியன், செல்போன் கோபுரத்தில் யாரேனும் ஏறினால், தான் கீழே குதித்து விடுவதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறும் முயற்சியை கைவிட்டனர். அதன் பின்னர் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, விவசாயி வீரபாண்டியனிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து, வீரபாண்டியன் கீழே இறங்கி வந்தார்.
விவசாயி கைது
அதன்பின்னர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, காவல்துறையின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக இந்த போராட்டத்தை கைவிடுவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரபாண்டியனை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற செந்துறை போலீசார், தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விவசாயியின் இந்த திடீர் போராட்டத்தால் செந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story