நித்திரவிளை அருகே கோவிலில் சாமி சிலை திருடியவர் கைது


நித்திரவிளை அருகே கோவிலில் சாமி சிலை திருடியவர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 3:45 AM IST (Updated: 19 April 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே கோவிலில் சாமி சிலை திருடியவர் கைது

நித்திரவிளை,

நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று ஒரு நபர் மேற்கூரையை உடைத்து கோவிலுக்குள் புகுந்து, சாமி சிலையை திருடிக்கொண்டு ஓடினார். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காஞ்சாம்புரத்தை சேர்ந்த பிபின் (வயது 22) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சாமி சிலையை போலீசார் மீட்டு, பிபின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story