குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் நூதன போராட்டம்


குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் நூதன போராட்டம்

வில்லுக்குறி,

வில்லுக்குறி அருகே நுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட குதிரைபந்திவிளையில் 5 சாலைகள் சந்திக்கின்றன. இந்த பகுதி வழியாக பேரூராட்சியின் குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி கொண்டிருந்தது. இதனால், சாலையில் ஆழமாக பள்ளம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று அந்த வழியாக, பள்ளி மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற ஒரு வேன் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. தொடர்ந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு வேன் மீட்கப்பட்டது. இதைதொடர்ந்து, அந்த பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாழை மற்றும் செடிகளை எடுத்து வந்து, சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது. இந்த போராட்டத்தில் வில்லுக்குறி பேரூராட்சி தி.மு.க. அவைத்தலைவர் சகாயம், ஒன்றிய குழு உறுப்பினர் ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் நடப்பட்டிருந்த வாழை மற்றும் செடிகளை அகற்றினர்.


Next Story