மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் பருகும் குடிநீரை விட கூடுதலாக குடிநீர் பருக வேண்டும். இரவு நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இருக்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ளலாம்.
கால்நடைகளை கொட்டகையில் வைத்து பாரமரித்துக் கொள்ள வேண்டும். உடுத்தும் ஆடைகள் மிக எடை குறைந்த, வெளிர் நிறங்களில், தளர்வாக உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது “கூலிங்கிளாஸ்“, குடைகள், ‘ஷூ` மற்றும் காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.
டீ–காபி குடிக்க வேண்டாம்
அவசியமாக பணி நிமித்தமாக வெளியில் செல்லும் போது ஈரமான துணியினை தலை, கழுத்து, முகம் மற்றும் மூட்டுகளில் படும்படியாக போட்டுக் கொண்டு வெளியில் செல்ல வேண்டும். டீ, காபி, கார்போ ஹைட்ரேட் குளிர்பானங்கள் ஆகியவற்றினை தவிர்த்திட வேண்டும். ஓ.ஆர்.எஸ். பவுடர், லெசி, நீராகாரம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், மோர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகி வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம்.
உடல் மிகவும் சோர்வுறுதல் மற்றும் இதர வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

Next Story