கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள்

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஆந்திர போலீசால் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் முகமது செரீப் (வயது 63). நேற்று முன்தினம் இரவு இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பேர் ரூ.450–ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதை கண்ட அப்பகுதி மக்கள், 2 பேரையும் பிடித்து ஆரம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் குரோம்பேட்டையை அடுத்த ஜமீன்ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் (28), எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (23) என தெரியவந்தது. 2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செம்மரம் கடத்தல் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கைது

கடந்த மாதம் எளாவூர் அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே லாரி உரிமையாளர் பன்னீர்செல்வத்தை கொலை செய்த வழக்கில் இவர்கள் 2 பேரும் ஆந்திர போலீசால் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.


Next Story