கே.ஜி.கண்டிகையில் மதுக்கடையை முற்றுகையிட்ட 24 பேர் கைது
கே.ஜி.கண்டிகையில் மதுக்கடையை முற்றுகையிட்ட 24 பேர் கைது
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக திருத்தணி ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் வீரபிரம்மம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டம், திருத்தணி நகர தலைவர் ரமேஷ் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்து திருத்தணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில், ஜி.எஸ்.டி. சாலை அருகே செயல்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்தனர்.
Next Story