மேலச்செவல் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


மேலச்செவல் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 April 2017 1:30 AM IST (Updated: 19 April 2017 8:09 PM IST)
t-max-icont-min-icon

மேலச்செவல் அருகே நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேரன்மாதேவி,

மேலச்செவல் அருகே நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

நெல்லை மாவட்டம் மேலச்செவல் நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொழுமடை பஸ்நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கற்பகம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை–பாபநாசம் மெயின் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத், சேரன்மாதேவி தாசில்தார் விமலா ராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

பேச்சுவார்த்தையின் போது, கொழுமடை பஸ்நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், பஸ்நிறுத்தம் குறித்த அறிவிப்பு பலகையை உடனடியாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story