சத்தி தாலுகா அலுவலகம் முன்பு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சத்தி தாலுகா அலுவலகம் முன்பு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 19 April 2017 10:47 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் நேற்று பகல் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சத்தியமங்கலம்,

வறட்சியால் வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். விலையில்லா அரிசி மாதம் 30 கிலோ வழங்க வேண்டும். கூலியை உயர்த்தி 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் நேற்று பகல் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சங்க செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சக்திவேல், மகேந்திரன், செல்வம், மாநில விவசாயிகள் சங்க துணை செயலாளர் துளசிமணி, மாவட்ட தொழில் சங்க தலைவர் மோகன்குமார், நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் புகழேந்தியிடம் கொடுத்தனர்.


Next Story