கவுந்தப்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கவுந்தப்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 10:47 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுந்தப்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுந்தப்பாடி

வங்கிகளில் விவசாயிகள் வாங்கி உள்ள அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும் குழுவில் விவசாயிகள் இடம் பெற வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுந்தப்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தடப்பள்ளி முறைநீர் பாசன சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் கீழ்பவானி முறைநீர் பாசன சபை இணைச்செயலாளர் வெங்கடாசலபதி, செங்கோட்டையன், பிரதாபன், கரும்பு வளர்ப்போர் விவசாயிகள் சங்க தலைவர் சென்னியப்பன், பெருமாள், பழனிச்சாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story