பெரியகுளம் அருகே வேன் டயரில் சிக்கிய விவசாயி உடல் நசுங்கி பலி


பெரியகுளம் அருகே வேன் டயரில் சிக்கிய விவசாயி உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 20 April 2017 3:00 AM IST (Updated: 20 April 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே வேன் டயரில் சிக்கிய விவசாயி உடல்நசுங்கி பலி நண்பர் கண்முன்னே நடந்த பரிதாபம்

பெரியகுளம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சென்றாயபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). இவருடைய நண்பர் முத்துச்சாமி (55). விவசாயி. சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெரியகுளம் அருகே உள்ள வேல்நகருக்கு சென்றனர்.

 பின்னர் செல்லப்பாண்டியின் நண்பர் ஒருவரின் வீட்டு விசே‌ஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு சென்றாயபுரத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். பெரியகுளத்தை அடுத்துள்ள தோட்டக்கலை கல்லூரி அருகே சென்ற போது, பின்னால் வந்த வேன், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி சாலையில் விழுந்தார். அவர் மீது வேனின் டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். படுகாயமடைந்த செல்லப்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 இது குறித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் பெரோஷ்கான் என்பவர் மீது பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story