திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பது பற்றி கலெக்டர்கள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பது பற்றி கலெக்டர்கள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 April 2017 4:00 AM IST (Updated: 20 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பது பற்றி கலெக்டர்கள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த குருவிக்காரன்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த அழகியநாயகிபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.

இவர்கள் தங்கள் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த மனுக்கள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், டாஸ்மாக் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story