ஆவடியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


ஆவடியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 20 April 2017 3:45 AM IST (Updated: 20 April 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆவடி,

ஆவடி ராஜீவ்காந்தி நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 31). எம்.பி.ஏ. படித்து உள்ள இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி (22). பி.பி.ஏ. பட்டதாரி.

இவர்களின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகும். இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் செந்தமிழ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் காலை கணவன்–மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் முனியசாமி வேலைக்கு சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

வேலை முடிந்து இரவில் முனியசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவி இந்துமதி புடவையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் படுக்கையில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதை பார்த்து முனியசாமி கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்துமதிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story