குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பாப்பக்காபட்டியில் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலை,
கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பக்காபட்டிகாலனியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார் அடிக்கடி பழுது அடைந்தது.
இதன்காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்வதற்காக பாப்பக்காபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் மோட்டாரை கழற்றி எடுத்து சென்றனர். அதன்பின்னர் மீண்டும் கொண்டுவரவில்லை. இதனால் முற்றிலும் குடிநீர் கிடைக்காமல், அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாப்பக்காபட்டி காலனி பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் மனு அளித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், விரைவில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நேற்று இரும்பூதிபட்டி - மைலம்பட்டி சாலையில் உள்ள பாப்பக்காபட்டி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், கிருஷ்ணராயபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், பாப்பக்காபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story