ஆலந்தூரில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ஆலந்தூரில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 April 2017 3:30 AM IST (Updated: 20 April 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த ஆலந்தூர் மார்கோ தெருவில் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தின் அருகே

ஆலந்தூர்,

கடந்த 16–ந் தேதி நள்ளிரவு திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த தொழிலாளி வேலு (வயது 43) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஆலந்தூர் ஆபிரகாம் நகரைச் சேர்ந்த லாரன்ஸ் (21) என்பவர் குடிபோதையில் நடந்த தகராறில் வேலுவை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. கொலை நடந்த 24 மணி நேரத்தில் லாரன்சை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் வேலு குடித்து விட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அவரை கொலை செய்ய கந்தசாமி (45) என்பவர் லாரன்சை துண்டி விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பரங்கிமலை போலீசார், இந்த கொலை வழக்கு தொடர்பாக கந்தசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story