23-ந் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
கும்பகோணத்துக்கு 23-ந் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம்,
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் வருகிற 23-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பிரதிநிதிகள் மணிவாசகம், கரிகாலன், ஒன்றிய பொருளாளர் முத்துகுமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் சாகுல்அமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வரவேற்பு
கும்பகோணத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். 25-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story