தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.41 லட்சம் இழப்பீடு
தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க டாக்டருக்கு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க டாக்டருக்கு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் உயிரிழப்புமும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஸ்வப்னா(வயது35). இவர் கடந்த 2002–ம் ஆண்டு மாகிம் இந்துஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இவர் உயிரிழந்து ஓராண்டு கழித்து அவரது கணவர் பிரசாந்த் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், ஆஸ்பத்திரி டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தான் ஸ்வப்னா உயிரிழந்தார் என்றும், தனக்கு இழப்பீடாக ரூ.87 லட்சம் தர உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.
ரூ.41 லட்சம் இழப்பீடுஇந்த வழக்கு மீதான விசாரணையின்போது ஆஸ்பத்திரி டாக்டர் அஸித் ஹெக்டே, ஸ்ப்னாவின் நுரையீரலை சுற்றியிருந்த நீரை எடுக்க முயன்றபோது, அவர் பயன்படுத்திய ஊசி ஈரலில் குத்தி காயம் ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
எனவே டாக்டர் அஸித் ஹெக்டே, ஸ்வப்னாவின் குடும்பத்திற்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.