தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு


தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு

தஞ்சாவூர்,

தஞ்சை-கும்பகோணம் சாலையில் வயலூர் அருகே உள்ளது குருவாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள், அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது மாடுகள் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் குருவாடியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மின்இணைப்பை துண்டித்தனர். 

Next Story